%Tamil Love Quotes%

காதல் என்பது மொழி வேறுபாடின்றி அனைவரும் உணரும் ஒரு உணர்வு. அன்பை வார்த்தைகள் இல்லாமல் விளக்க முடியும், மேலும் இந்த உணர்வை வெளிப்படுத்த தமிழ் மொழியில் எண்ணற்ற காதல் மேற்கோள்கள் உள்ளன. இங்கு “Tamil Love Kavithai” என்பதன் முக்கியத்துவம், பொருத்தம் மற்றும் பொருள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டோம்.

Tamil Love Kavithai” முக்கியத்துவம் தனிப்பட்ட மற்றும் சமூகமாக இருக்கலாம். இந்த வார்த்தைகள் வாக்கியங்கள் மூலம் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு அழகான வழியாகும். நாம் ஒருவரை நேசிக்கும்போது, ​​​​அவர்களுக்காக நம் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து பேச விரும்புகிறோம், மேலும் “Tamil Love Kavithai” இதற்கு நமக்கு உதவும். இந்த வார்த்தைகள் நம் உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்தவும், நம் உறவுகளை வலுவாகவும் இனிமையாகவும் மாற்ற உதவுகின்றன.

Tamil Love Kavithai” தமிழ் சமூகத்தின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருப்பதால் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் மொழி இந்தியாவின் தென் பகுதியில் பேசப்படுகிறது மற்றும் அதன் தனித்துவமான இலக்கியம் மற்றும் கவிதை உள்ளது. எனவே, “Tamil Love Kavithai” மொழி மற்றும் இலக்கியத்துடன் தொடர்புடையது, அதன் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் அதிகரிக்கிறது.

Tamil Love Kavithai” என்பதன் பொருள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது. இந்த மேற்கோள்களில் மறைந்திருப்பது நம் துணையிடம் நாம் உணரும் அன்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு. இந்த மேற்கோள்கள் வாழ்க்கையின் காதல் தருணங்களை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது மற்றும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையின் இனிமையை அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது.

Tamil Love Kavithai” வெவ்வேறு வாழ்க்கை வரலாற்றுக் கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதால் அதிக பொருத்தம் கொண்டவை. நீங்கள் ஒரு இளம் ஜோடியாக இருந்தாலும், முதல் காதல் தொடர்பு கொண்டவராக இருந்தாலும் சரி அல்லது வயதான ஜோடியாக இருந்தாலும் சரி, அவர்களின் உறவு தோல்வியடைந்து, பங்குதாரர் இறந்துவிட்டதைக் கண்டால், “Tamil Love Kavithai” அவர்களின் தேவைகளையும் உணர்வுகளையும் எப்போதும் பூர்த்தி செய்யும்.

%Tamil Love Quotes%

Top Tamil Love Kavithai | Love Status Tamil


நொடிகளில் தொடங்கி
மணித்தியாலங்களையும்
கடந்து ரசிக்கின்றேன்
அலுப்பதுமில்லை
சலிப்பதுமில்லை
உன்னுடனான
உரையாடல்களில்


%Tamil Love Quotes%

கொடுப்பது
நீ யென்றால்
இன்பம் தான்
இம்சைகளும்


எத்திசை சென்றாலும்
தீண்டுகிறாய்
காற்றாய் நினைவில்


உன் நினைவும்
என்ன கோடைக்கால
வெப்பமா
மார்கழியிலும் வியர்க்கிறதே


சில மணித்துளிகள்
என்றாலும்
நீ எனக்காக
ஒதுக்கும்
நேரம் பொன்னைவிட
உயர்ந்தது


%Tamil Love Quotes%

தென்றலையும்
புயலாக்கினாய்
உன் காதல்
தேசத்தில்


சற்றே மறைந்துக்கொள்
என் கைகளும்
போட்டுவிடும்
காதல் கோலம்
எனை மறந்து
உன்னால்


முடியாது என்று
தெரிந்தும்
முயற்ச்சிக்கிறேன்
பிடிவாதத்தில்
பிரிவை


காதோரம் சீண்டி
காதல் மொழி
பேச என்னவனிடம்
கற்று கொண்டாயா


%Tamil Love Quotes%

விழி மூடினால்
துணையாய்
உன் நினைவு


அனைத்தையும்
மனதிலிருந்து
கலைத்துவிட்டு
நீ மட்டும்
நிலைத்து விடுகிறாய்
அழியா ஓவியமாய்


துடிப்பும் தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்


வேராய் ஊன்றி
மனதில்
பாடாய் படுத்துகிறாய்


Tamil Love Kavithai


%Tamil Love Quotes%

வான் திரையில்
ஆதவனாய்
விழி திரைக்குள்
நீ வந்து
என் நாழிகையயும்
அழகாக்குகிறாய்


மீளா துயிலும்
மகிழ்வே
உன் அணைப்பில்


உன் அன்பின்
கிளையில்
உதிரா மலர்
நான்


சிந்திக்காமல்
கிறுக்குகிறேன்
உன் சிந்தனையை
ரசித்தே கவிதை


%Tamil Love Quotes%

படிக்காமலயே
தலை கவிழ்ந்தது நாணல்
நாணத்தில் அவன்
மனமறிந்து காற்றில்


காற்றில் ஆடும்
ஊஞ்சலாய்
மனம் நீயணைத்த
நொடிகள் தழுவி செல்ல


உன்னுள்
தொலைந்தபின்
தேடுவதென்பது
சாத்தியமே இல்லை
என்னுள் என்னை


விளக்கொளியில்
மாட்டி கொண்ட
விட்டில்
பூச்சியாய் மனம்
உன் நினைவொளியில்
சிக்கி கொ(ல்)ள்கிறது


%Tamil Love Quotes%

Also Read:

1000+ Love Quotes In Tamil

500+ Life Quotes In Tamil


உனை
தொலைக்காமலேயே
தேடி
நான் தொலைவதும்
ஒரு சுகம்தான்


கனவோ நனவோ
நமக்கான
உலகில் யாருக்கும்
இடமில்லை


வியப்பாய் இருக்கிறது
எப்படி வியாபித்தாய்
இப்படி என்னுள் என்று


கரை தொடும்
அலையாய்
தொட்டு கொண்டிருக்கிறாய்
மனதை
ஒதுங்கியே இருந்தாலும்


மறந்து வாழ
முடியாதளவுக்கு
நிறைந்து விட்டாய்
மனதில்


வரிகள் வார்த்தையின்றி
எனை ரசிக்க
தூண்டுகிறது
உன் மூச்சு காற்றும்
கவிதையாய்


Best Tamil Love Kavithai


ஒளி நீயாக
இருக்கையில்
துளியாக மாறுவதில்
எனக்கென்ன தயக்கம்


விடைபெறும் போதெல்லாம்
லஞ்சம் கேட்குறாய்
மொத்தமாய்
ஒரு முத்தம் என்று


கூந்தல் தொடும்
மலரிலும் உணர்கிறேன்
உன் மென் தீண்டலை


அனைத்தயும் நிசப்தமாக்கி
எனையும் மயக்கி
செல்கிறது
உன் மூச்சின் ஓசை


எனக்காக காத்திருப்பாய்
என்ற நம்பிக்கையிலேயே
பயணிக்கின்றேன்
உன் வழியில் நானும்


உடன் பயணித்த
போது இல்லாத
நேசம்
யாரோ தடைப்போட
நெருங்கியது


உன் அன்பென்ற
ஒன்று இல்லையெனில்
நான் என்றோ
மறைந்திருப்பேன்
மண்ணில் என்னவனே


துரத்தும்
உன் நினைவு
கடத்தி போகிறது
எனையும் உன்னிடம்


என்ன நேர்ந்தாலும்
கரத்தை
விடுவித்து விடாதே
காற்றோடு கலந்திடுமே
என்னுயிரும்


சுவாசமின்றி கூட
வாழ்ந்திடலாம்
போல ஆனால்
உன் நேசமின்றி
வாழ்வது கடினம்


மொத்த கனவுகளையும்
கண்களில் தாங்கி
காத்திருக்கேன்
நனவாக்கிட
நீ வருவாயென


என்னாசைகள்
அனைத்தையும்
நிறைவேற்றும்
என்னவனின்
ஆசைகளை
என் செவிகளில்
உரைக்க செய்


Love Status Tamil


நிலையில்லா வாழ்க்கை
என்று தெரிந்தும்
மனம் நிலைத்திட
துடிக்குது
உன்னிடத்தில்


நுகரும் வாசனையாய்
உன் வாசம்
என்னுள் சுவாசமாய்


வெட்கத்திடம் சற்றே
பொறாமைதான் எனக்கு
என்னை முந்திக்கொண்டு
உன்னை பார்க்க வருவதால்


உன் நினைவில்
சுழலவிட்டு
நிழலாய் மறைந்து
விடுகிறாய்


அருகில்
இல்லாத போதும்
இருக்கின்றாய்
சிறு அசைவிலும்
எங்குமாய்
கலந்தே என்னுள்


எனக்காக வலிகளை
தாங்கி கொள்ளும்
உனக்காக இருப்பேன்
எப்போதும் மருந்தாக


மனையிலிருந்து
சென்றாலும்
மனமெங்கும் நடமாடி
மணம் பரப்புகிறாய்


எங்கிருந்தாலும்
நீயுமெனை நினைத்து
கொண்டிருப்பாய்
என்ற எண்ணமே
எனையும்
நகர்த்தி கொண்டிருக்கு
அழகாய்


அதிகார பார்வை
என்றாலும்
அடங்கி தான்
போகிறேன்
என்னவன் அன்பிற்காக


சுவாசமாய்
நீயிருக்கும் வரை
சுவாசிக்கும்
ஒவ்வொரு நொடியும்
நமக்கு இன்று மட்டுமல்ல
என்றும்
காதலர் தினம்தான் அன்பே


காலம் மாறுகிறது
ஆயுள் மாறுகிறது
வருடம் மாறுகிறது
ஏன் நாளும் மாறுகிறது
ஆனால் நீ பார்த்த
அந்த ஒரு நொடி பார்வை
இன்னும் மாறவில்லை


கண்ணோடு
கலந்து விடு
உன் மனதோடு
மகிழ்ந்திருப்பேன்


காண தவித்து
கொண்டிருக்கும்
கண்களை
கடலாக்குகிறாய்
தாமதித்து


இரு கைகளிலும்
ஏந்தா விட்டாலும்
ஒரு கையையேனும்
பற்றிக்கொள்
நீ எனக்கானவன்
என நான் மகிழ


காதலும்
அவஸ்தை தான்
உனை காணாத
போது


மழை சாரலின்றி
ஒரு வானவில்
உன் நினைவு
தூறலில் மனமெங்கும்


விரும்பியே
சிறை பட்டாய்
விடுதலை என்பதே
கிடையாது
நீ விரும்பினாலும்
என்னிதய சிறையிலிருந்து


Tamil Love Kavithai


இருளின் அடர்த்தியை
வெளிச்சமே
நிர்ணயிப்பது போல்
தேடுதலின் வலியை
நினைவுகளே
நிர்ணயிக்கிறது


தொட்டு செல்லும்
உன் நினைவில்
மனமும்
பட்டாம்பூச்சியானது


Also Read:

500+ Motivational Quotes In Tamil

500+ Tamil Love Quotes


வானத்திற்கு நிலவழகு
வான் மகளே
என் கவிதைக்கு
நீயே அழகு


மரண வலிகள்கூட
மறந்து போகிறது
உன் மார்போடு
சாயும் போது


சட்டென
விடியும் இரவும்
நீள்கிறது
உன் நிசப்தத்தில்


பார்வையில்
ஒரு கவிதை
கேட்டால்
பாதத்தில்
கொட்டி தீர்கிறான்
பல கவிதைகளை
பாவையிவள் ரசிக்க
மென்னிதழ் கொண்டு


நீ மௌனமாகும்
ஒவ்வொரு இரவும்
எனக்கும் சிவராத்திரியே


என் தேவை
அறிந்து
சேவை செய்யும்
சேவகன் இவன்
வீட்டுக்கு அரசன்
என்றாலும்
காதலில்


இந்த நிமிடம் வரை
எதுவுமில்ல
இனி உன்னை தவிர
எதுவுமில்ல மனதில்


நிலவில்லாத வானும்
நீயில்லாத என் வாழ்வும்
இருளடைந்தே இருக்கும்
(நிலவும் நானும்)


கட்டுப்பாடான
மனம்தான்
இன்று
கட்டுக்கடங்காத
ஆசைகளோடு கடக்குது
நீயெதிரே தோண்றும்
போதெல்லாம்


ஊடலின்
பின் இத்தனை
காதலா
வியக்க வைக்கிறது
உன் அன்பு
அன்பே


பார்வை கூட
கவியெழுதும்
என்றறிந்தேன்
உன் விழி
மொழியில்


ஆழுறக்கத்திலும்
உன் அரவணைப்பு
பனிக்கால
போர்வையாய்
கதகதக்கிறது அன்பே


என் திமிரு கோபம்
இவற்றிக்கு மத்தியில்
ஒரு அன்பும் காதலும்
வெளிவருகிறது அவனிடம்
மட்டுமே


உன் பாதையில்
என் பாதங்களும்
அலை அழித்தாலும்
அகிலமே எதிர்த்தாலும்


அதிசயம் என்று
எதுவுமில்லை
நொடிக்கொரு
முறை எனை
சூழ்ந்து கொள்ளும்
உன் நினைவுகளை விட


Best Love Status Tamil


உன்னை கடந்து போக
முடிந்த என்னால்
மறந்து போக முடியவில்லை


உனக்காக
காத்திருத்தலின்
வலியை
உன் நினைவுப் பீலி
கொண்டே
வருடிக்கொள்கிறது மனது


மெல்ல நகரும்
உன் நினைவு
வருடுகிறது
மனதை மயிலிறகாய்


பொய் கூட
அழகு தான்
உனக்காக
கிறுக்கும் போது
கவிதையில்


சுட்டெறிக்கும்
வெயிலும் அழகுதான்
ஒரு குடைக்குள்
உன்னோடு
இளைப்பாறுகயில்
காதலில்


உனக்காக நான்
என்ற
உன் வார்த்தையில்
இந்த உலகமே
என் கைக்குள்
அடங்கியது போல்
உணர்ந்தேன் அன்பே


இரவுக்கும்
இரக்கமில்லை
உறக்கத்தை
கொள்ளையடித்து
உன் நினைவிலேயே
தவிக்க விடுகிறது


பருகி முடித்தபின்னும்
தித்திக்கும் தேனீரின்
சுவையாய்
நீ தந்ந முத்தங்களும்
சுவைக்கிறது
எச்சில் உலர்ந்த
பின்னும்


கண்களால்
கலந்த காதல்
கண்ணீரில் கரைகிறது
உனை காணாமல்


ஏன் வந்தாய்
எப்படி வந்தாய்
என்றெல்லாம் தெரியாது
ஆனால்
எங்குமாய் நிறைந்து
விட்டாய் எனக்குள்


அவனதிகாரமோ
அவளதிகாரமோ
அன்பின் அதிகாரத்தில்
யாவரும் அழகே


தடையின்றி துடிக்கும்
என் இதயம்
நீ விடைபெற தாமதிக்கும்
ஒவ்வொரு நொடியும்


அள்ள அள்ள
குறையாத
அட்சய பாத்திரம்
உனதன்பு


அருகில் நீயிருந்தால்
நெஞ்சணையும்
பஞ்சணைதான்
நானுறங்கும்


எப்படி
சரி செய்தாலும்
பிழைத்துதான்
போகிறது
உன் பார்வை
தீண்ட


Romantic Tamil Love Kavithai


முகம் பார்க்கும்
கண்ணாடியாய்
பார்த்து ரசிக்கிறேன்
என் கரத்தோடு
இணைந்த
உன் கைரேகையை


சுவாசத்தில்
எனை மீட்டி
கொண்டிருக்கிறாய்
நானும்
உன் இதய
வீணைதான்


பல கிண்ணங்கள்
தீர்ந்தும் வராத
போதை
உன்னிதழ் கிண்ணம்
தீண்ட வந்தது


பார்த்ததும் பரவசம்
அழைப்பது நீயென்பதால்


என் விலகளில்
உன் நெருக்கமும்
உன் விலகளில்
என் நெருக்கமுமே
நம் காதலுக்கு
என்றும்
முற்றுப்புள்ளியில்லா
தொடர்கதைகிறது


அவசர பயணத்தின்
போதெல்லாம்
ஆறுதல்
பரிசு கேக்கிறாய்
ஒரு முத்தம் என்று


தனிமையெனும்
பஞ்சணையில்
நம் நினைவுகளே
எனை இதமாய்
தாங்கும் தலையணை


உடன் நீயிருந்தால்
பொன்நகை
அணியாமலேயே
ஜொலிக்கும் மனம்
புன்னகையில்
என் மகிழ்ச்சியின்
முகவரி நீ


ஒரு வரி கவிதை
நீ என்றவன்
இரு வரி
கொண்டு ரசித்தான்


குளிருக்கு இதமாய்
தேனீராய் மனதுக்கு
இதமான போர்வையாய்
உன் நினைவு


என்னை ஈர்க்கும்
கவிஞன் நீ


எனக்கேது இதயதினம்
என்னிதயம் இருப்பது
உன்னிடம் அல்லவா


கண்களால்
கட்டிப்போடும் வித்தை
எங்கு கற்றாய் கள்வனே


என்னில் உனையும்
உன்னில் எனையும்
மனங்கள்
சூடிக் கொண்டபின்
மலர் மாலைகளும்
ஏனோ


கண்ணோடு
நீ கனவுக்குள்
நான் உறங்காமலேயே
கண்கள்


தொலைவாக
நீ போனால்
தொடர்கிறது
உள்ளமும் உன்னிடம்
தொடும் தூரம்
வந்துவிடு என்றே


சுமக்கின்றேன் சுகமாய்
சிலம்புக்குள்
ஒலி போல
உயிருக்குள் உனை


Top Tamil Love Kavithai | Love Status Tamil


முடிவில், “Tamil Love Kavithai” என்பது நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களைத் தொடும் முக்கியமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு அழகான வழியாகும். இந்த மேற்கோள்கள் அன்பும் உறவுகளும் நம் வாழ்வின் முக்கியமான பகுதியாகும், அவற்றை நாம் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கின்றன. “Tamil Love Kavithai” என்பது தமிழ் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு வடிவம், அவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்த பாரம்பரியத்தை நாம் முக்கியமானதாக மாற்ற முடியும். இந்த மேற்கோள்களிலிருந்து அன்பும் உறவுகளும் நம் வாழ்வின் முக்கிய பகுதிகள் என்பதையும், அவற்றை நாம் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்கிறோம்.

எனவே, “Love Status Tamil” நம் உறவுகளை இன்னும் சிறப்பானதாக்குகிறது, நம் உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்த உதவுகிறது, மேலும் நம் வாழ்க்கையை மயக்கும் மற்றும் காதல் நிறைந்ததாக மாற்றுகிறது. “Love Status Tamil” என்பதன் பொருள் எப்போதும் ஆழமாகவும் உயிரோட்டமாகவும் இருக்கும், மேலும் அவை எப்போதும் அற்புதமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.


Also Read:

What Is Tamil Kaithai

Tamil Kavithai Collection

100+ Sad Quotes In Tamil


எங்களின் இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *