%Tamil Love Quotes%

Tamil Kavithai“, இந்திய இலக்கியத்தின் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமான ஒரு தனித்துவமான மற்றும் அழகான இலக்கிய பாரம்பரியமாகும். அதன் அனைத்து வடிவங்களும் ஈர்ப்புகளும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை சிறப்பான முறையில் வெளிப்படுத்துகின்றன. “Tamil Kavithai” முக்கியத்துவம் அதன் ஆழமான உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் உரையாடல்களில் உள்ளது, மேலும் அது இலக்கிய மற்றும் கலாச்சாரத் துறையில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

Tamil Kavithai“யின் அடிப்படை நோக்கம் சிந்தனையை, உணர்ச்சிகளின் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் தனித்துவமான அனுபவத்தை வாசகர்களுக்கு வழங்குவதாகும். இதைத் தொடர்ந்து, “Tamil Kavithai” அதன் வாசகர்கள் ஒன்றாகச் சிந்திக்கவும் சிந்திக்கவும் ஒரு ஊடகம். இது கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு அழகான மொழியைப் பயன்படுத்துகிறது மற்றும் மனிதகுலத்தின் குறிப்பிட்ட சவால்கள், பிரச்சனைகள் மற்றும் கருத்துக்களை அடிக்கடி தெளிவாக முன்வைக்கிறது.

%Tamil Love Quotes%

Tamil Kavithai“யின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது மற்றும் தமிழ்நாடு என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. இது இலக்கியம் மற்றும் கலைகளின் மீது மிகுந்த பற்றுறுதிக்கு பெயர் பெற்ற பிரதேசமாகும், மேலும் தமிழ் கவிதை அதன் பாரம்பரிய பாரம்பரியத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது.

Tamil Kavithai“யின் கரு அதன் சிற்றின்பம், அனுபவத்திறன் மற்றும் அதீத உணர்ச்சியில் உள்ளது. இது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட மற்றும் சமூக நிறைவை புரிந்துகொள்வதற்கான வழிமுறையாகவும் உள்ளது. அன்பு, பாசம், துக்கம், மகிழ்ச்சி, மனவுறுதி ஆகியவற்றுடன் வாழ்க்கையின் எண்ணற்ற வண்ணங்கள் உள்ளன. “Tamil Kavithai“யின் கவிஞர்கள் தங்கள் உணர்வுகளுக்கு வார்த்தைகளில் வடிவம் கொடுப்பது, எந்த மொழியிலும் இருக்க முடியும் என்பது வார்த்தைகளின் வலிமையின் அடையாளம்.

Tamil Kavithai Collection | Best Tamil Kavithai

எத்தகைய
இன்னல்கள் வந்தாலும்
எப்பொழுதும் சிறந்த சிந்தனையுடனும்
மற்றும் உயர்ந்த எண்ணங்களும்
நம்மை நிலையாக வாழ
வழி வகுக்கும்


அன்பு காட்டும்
பெண்ணிடமிருந்து
சற்று விலகியே இருங்கள்
ஒருநாள்
அன்பு காதலாக
மாறிவிடும்


மாயோனின்
மாய பேரழகு
மெல்ல
புன்னகைக்கும்
மயில்
தோகையில் ஒளிந்திருக்கிறது


வாழ்க்கை உன்னை
எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும்
நினைவில் வைத்துக்கொள்
நீ படும் கஷ்டமெல்லாம்
உன்னை சிறந்த மனிதனாக
மாற்றுவதற்கே என்று


சொற்களில்
அன்பானது வாழ்த்துகள்
தெரிவிப்பது
சொற்களில்
அழகானது வாழ்த்துகளை
பகிர்ந்துகொள்வது


எட்ட நின்றாலும்
என் இதயம்
உனக்காக துடிக்குமடா
நீ மறைந்தாலும்
உன் முகம்
என் மனதில் மலருமடா


இடைவெளியில்லாமல்
எழுதப்பட்ட
எந்த ஒரு வாக்கியத்திற்குள்ளும்
புரிதல்கள் அவ்வளவாய் இருப்பதில்லை


உடலில்
இரு கைகளும்
இல்லாத நிலையில் கூட மனதில்
நம்பிக்கை
இருந்துவிட்டால்
எந்த செயலும்
எளிதில் முடித்துவிடலாம்


வாழ்க்கையில்
முன்னேற
நரியின் தந்திரம்
எந்த வழியிலும்
சம்பாதிக்க
ஓநாயின் வெறி
மொத்ததில்
விலங்குகளின்
சங்கமம் மனிதன்

Best Tamil Kavithai


விடாமுயற்சி எனும்
வாகனம் ஏறி
உழைப்பு எனும்
ஓட்டுநர் துணையுடன்
தன்னம்பிக்கையுடன்
பொறுப்புகளை சுமந்து
தன்னிறைவு காண்பதே
நம் பயண இலக்கு


வாழ்க்கை என்பது வாழத்தான்
வசந்தகாலம் என்பது நம்
எண்ணம் தான்
மகிழ்ச்சி என்பது ஒரு வகை
பயிற்சிதான் பழகிவிட்டால்
வாழ்க்கை என்றும் மகிழ்ச்சி தான்


அன்பு
நமக்கு
பலமாகவும் சில நேரங்களில்
பலவீனமாகவும்
மாறிவிடுகிறது


உட்கார்ந்தபடி
உலகின்
மூலைமுடுக்கெல்லாம்
அழைத்துச்செல்லும்
அற்புத பாதை புத்தகம்


எதையும் நான் கடப்பேன்
தடைகளை தகர்ப்பேன்
தயங்காமல் நான் நடப்பேன்
துன்பத்தை தொலைப்பேன்
இன்பத்தை அணைப்பேன்
வாழ்க்கையை என்வசம்
வளைப்பேன் அனைவரையும்
அன்பென இணைப்பேன்


உதிர்ந்து கிடந்த
பூக்கள் அழகு
கூட்டும் போது தான்
குப்பையாகிவிட்டது


தன்னம்பிக்கை இல்லாதவரை
நம்புவதே இருபக்க தோல்வி


அன்பானவர்கள்
கூறும் ஒற்றை
வார்த்தையால்
கரைந்து போகிறது
அத்தனை காயங்களும்


ஆசைகளால் மட்டுமே
அலங்கரிக்கப் பட்ட
என் அக ரதத்தில்
அழகாக வலம் வரும்
அகிம்சை ராணியவள்


பிழையில்லா
கவி ஒன்றை
எழுத முயல்கிறேன்
அவள் வெட்க சிரிப்பினை
கண்டதும்
வீழ்ந்துவிடுகிறேன்


உன்னுடைய காத்திருப்புக்கள்
ஒவ்வொரு நாளும் என்னை
எதோ ரணம் செய்கிறது
சிறு சலிப்பு ஏதும் இல்லாமல்
மணிக்கணக்கில் காத்திருக்க
என் தவம் செய்தேனோ கண்ணே


ஒருவர் மீது
அதிக அன்பு
வைத்திருப்பதை
நிரூபிக்க மற்றொருவரின்
மனதைக் காயப்படுத்தி
விட்டு செல்கின்றனர் சிலர்


அதிகாரத்தால்
விலைக்கு
வாங்க முடியாததில்
முதன்மையானது
பெண்மையின் அன்பு


வர்ணிக்கப்பட்டுக் கொண்டே
இருப்பதாலோ என்னவோ
வசப்பட்டுக் கொண்டே
இருக்கிறேன்
அவள் அழகில்


நிகழும் என்று
எத்தனை வேண்டுமானாலும்
இருந்துவிட்டு போகட்டும்
இப்போது நிகழ்வதொன்றே
அவசியப்பட்டது

Tamil Kavithai Collection


விருப்பத்திற்கு
விடும் போது
மகிழ்வை தரும்
விசயங்கள்
விருப்பத்திற்கு
உட்படுத்தும் போது
மகிழ்வை
தருவதில்லை


பேசிப் பேசியே
ஏமாற்றுகிறார்கள்
என்பதெல்லாம் பொய்
அவர்களது பேச்சில்
நாம் ஏமாந்து விடுகிறோம்
என்பது தான் உண்மை


தேனீரை
அருந்திக்கொண்டு
படிப்பது பேரழகு
ரசனைகள்
மிகுந்த வரிகளை
உன்னை பருகிக்கொண்டு
வாசிப்பது ஆனந்தமே


சிந்தித்துக் கொண்டே
இருப்பவர்கள்
சிதறடிக்கொண்டே
இருக்கிறார்கள்
வாழும் நொடிகளை


புரியாமல் தடம்மாறி
திரிவோருக்கு
புரியவைக்க வாய்ப்பு
கிடைத்தால்
கட்டாயம் முயற்சி செய்துவிடு
நம் பக்க குறைகளையாவது
குறைத்துக் கொள்ளலாம்


இதழ் தீண்டி
காயம் செய்கிறாய்
பூவிதழ் மேல் கொட்டும்
சோவேன்னும் மழை


நோட்டமிடும் விழிகளுக்கு
நீ தூரமாகிப் போனாலும்
மனக் கதவினுள் அடைபட்டு
நெருங்கியே இருக்கிறாய்


தழுவிக்கொள்ளும்
ஆசைகளின்
பாரம் தாங்கும் மனதிற்கு
காத்திருக்கும் நிகழ்தலின்
சுவாரஸ்யம் அறிந்திட
அத்தனை ஆவல்


கூட்டுக்குள்
தவமிருந்து பெற்ற
இறகுகளால் வானத்தை
அளவிடுகிறது
பட்டாம்பூச்சி
அதன் அழகில்
களைகிறது இவன்
தவம்


உறவுகள்
இரண்டு வகை
ஒன்று அன்பை தரும்
மற்றொன்று
அனுபவத்தை தரும்
அன்பைத் தரும் உறவை
மனதில் வை
அனுபவத்தை தரும் உறவை
நினைவில் வை


வீதி முனை
கடக்கும் வரை
மீண்டு வரும்
பார்வைக்காக
காத்திருக்கும்
அந்நொடிகள்
காதல்’தனின்
அனிச்சை செயலோ


Also Read:

1000+ Love Quotes In Tamil

500+ Life Quotes In Tamil

500+ Motivational Quotes In Tamil

500+ Tamil Love Quotes

What Is Tamil Kaithai

Tamil Kavithai Collection

100+ Sad Quotes In Tamil


உள்ளுக்குள்
ஓலமிடும்
ஓராயிரம்
நினைவுகளை
உள்ளடக்கி
பூத்துச் சிரிக்கும்
ஒற்றை புன்னகைப் போல்
தருவதில்லை
உலகில் உயர்ந்த
பலத்தை எதுவும்


அவனோடு
விரல் கோர்த்து
நீண்ட உரையாடல் போதும்
எல்லாம் சரியாகிவிடும்
அவன் என் எல்லாமுமானவன்


மனக் குமுறல்கள்
ஆயிரம்
இருப்பினும்
சில மௌனங்கள்
மட்டும்
மனதை விட்டு
கலைவதேயில்லை


ஒருவரிடம் மிகுதியாய்
கொட்டப்படும் பேரன்பு
மகிழ்ச்சியை தருகிறதோ
இல்லையோ மிகுந்த
ஏமாற்றத்தை தருகிறது


அவன்
என் வண்ணத்து பூச்சி
நினைத்த நொடியில் ஸ்பரிசித்து
வண்ணம் பூசி
எண்ணம் எங்கும்
வியாபித்து செல்லும்
என் வண்ணத்து பூச்சி

**

உன் உதடுகள்
உச்சரிக்கும் வரை
என் பேனா
எழுதிக் கொண்டே
இருக்கும்
கவிதைகளை

Best Tamil Kavithai


அனைத்துக்கொள்
பத்திரமாக சிறு பிள்ளைபோல
உன்னை பிடித்துக்கொள்கிறேன்


தேகம் திருப்பி படுத்து
என் ராத்திரி நினைவுகளில்
மேகம் போல் உலா வரும்
ஏகாந்த ராகம் அவள்


நீரைவிட்டு
பிரிந்த மீனின்
நிலமை தான்
அவளை
காணாத பொழுதுகளும்


பிறரால்
நேசிப்படாத
உயிர்கள் எல்லாம்
சபிக்கப்பட்டவை
தான் போல


சிலருக்கு சிலவற்றை
இறைவன் தாமதமாக
கொடுத்தாலும்
தரமானதகவே
கொடுப்பார்


அடுத்தவரை ஏமாற்றி
சந்தோஷமாக இருக்கலாம்
அந்த சந்தோசம்
தான் ஏமாறும்
வரை மட்டுமே


சட்டென
தீ பிடிக்கும்
என் இதயத்திற்க்கு
அடைமழையாய்
பொழிந்து
அணைத்திடும்
அவளின்
அன்பு வேண்டும்


அன்பு செய்யுங்கள்
உதவி செய்யுங்கள்
முடிந்ததைச் செய்யுங்கள்
ஆனால் நிபந்தனையை
ஏற்படுத்தாதீர்கள்


உன் தனிமை ஒன்றே
நீ யார் என்பதை
உனக்கு உணர்த்தும்


விழியின் ஓரம்
தோன்றி மறையும்
சிறு துளி நீரும்
உனக்காக என்று
நான் எவ்வாறு
உணர வைப்பேன் உன்னை


சிறு புன்னகையுடன்
நல்லா இருக்கேனு
நகர்ந்து விடுங்கள்
யாருக்கும் உங்கள்
கதை கேட்க நேரம்
இல்லை இந்த இயந்திர உலகில்


மற்றவர்கள் சந்தோஷத்திற்காக
உன்னுடைய சந்தோசத்தை
இழப்பது தியாகம் அல்ல
அது ஆகசிறந்த முட்டாள்தனமே


நல்ல நாள்
சந்தோசம் தரும்
கெட்ட நாள்
அனுபவம் தரும்
மோசமான நாள்
பாடம் கற்று தரும்
எனவே எல்லா நாளும்
இனிய நாள் தான்


கதைக்கும் காற்றின்
கவிகளை படித்தேன்
கனவே என் விழிகள்
முட்ட வா நினைக்கும்
உன் இதயம் கண்டு
நிம்மதியின் நிறங்கள்
சுமந்தேன்


நீ பிரிந்து போவாய்
என தெரியும்
ஆனால்
இப்படி மறந்து போவாய்
என்று நான் கனவில் கூட
எதிர்பார்க்கவில்லை தான்


சில அனுபவங்கள்
மட்டுமல்ல
சிலரின் வார்த்தைகளும்
நம் வாழ்க்கையை செதுக்கும்


எந்த ஒரு சூழ்நிலையிலும்
உன் உள்ளத்தை தெளிவாக
வைத்துக்கொள். அது ஒன்றே
உன்னை மீட்டெடுக்கும்
மிகப்பெரிய சக்தி


எதுவுமற்றவர்களிடமே
கருணையின் சதவிகிதம்
கூடுதலாக இருக்கும்

Tamil Kavithai Collection


அவள் சிறு மெளனமே
எனக்கான காலம்
இதழ் பதிக்க இடமளித்த
அவள் கண்ணமே
எனக்கான உலகம்
இடை விழுந்து இடைபடாமல்
இருக்கவே இருக பற்றும்
அவள் இடையே
எனக்கான உயிர்


கேட்குற நேரத்துல
கொடுத்தால் தான்
பலரிடம் நல்லவனாக
இருக்க முடிகிறது
நம்மிடம் இல்லாததை பற்றி
அவர்களுக்கு கவலையில்லை


வெற்றி என்பது
முடிவல்ல
அடுத்த நிலையின்
தொடக்கப் புள்ளி


ஏமாந்தது வருத்தம்
தரவில்லை
ஆனால் உண்டு
குடித்து உறங்கி
கூடவே இருந்த
போது அடையாளம்
காண தவறி விட்டேன்
என்பது தான்
மிக மிக
வருத்தம் தருகிறது


என்போல்
பலரின் அதிகப்படியான
ஆசையெல்லாம் கூச்சலிட்டு
அழும் தருணங்களில்
எல்லாம் இவ்வுலகமே
செவிடாகிவிட வேண்டும்
என்பது மட்டுமே


ரசிக்கப்படும் அழகான
பொய்கள் கூட
வாழ்க்கையின்
சுவாரஸ்யங்கள்


எதிர்பாரா நேரத்தில்
ஏற்படும் இதழின்
சுவையும் இனிமையே


வாழ்வில்
போராட்டங்களே
அதிகமாகி போன போது
சொர்க்கமே
கையில் வந்தாலும்
சாதரணமாகவே
தெரியும்


தடைகளை கண்டு
தயங்காதே
தகர்த்து முன்செல்
வெற்றி
தாமதம் ஆனால்
உனதே


நேசிக்க யாருமில்லாத போது
ம்மை யோசிக்க வைக்கிறது
இந்த வாழ்க்கை


எனக்கான
செல்வம் நீ
எனக்கான
சொந்தம் நீ


சில ஏமாற்றங்கள்தான்
வாழ்க்கையின் புதியபாதை


கோபத்தில் நிதானமும்
குழப்பத்தில் அமைதியும்
துன்பத்தில் தைரியமும்
தோல்வியில் பொறுமையும்
வெற்றியில் தன்னடக்கமும்
வாழ்க்கையை இனிதாக்கும்


Also Read:

1000+ Love Quotes In Tamil

500+ Life Quotes In Tamil

500+ Motivational Quotes In Tamil

500+ Tamil Love Quotes

What Is Tamil Kaithai

Tamil Kavithai Collection

100+ Sad Quotes In Tamil


மற்றவர்களின் சந்தோஷத்துக்காக
நம்மை நாம்
கஷ்டப்படுத்திக் கொள்வது
எந்த விதத்திலும்
நன்மையை தந்து விடாது


சுயநலவாதியாக
இருப்பவர்கள் எல்லாம்
வரம் வாங்கி வந்தவர்கள்
வாழ்க்கையை முழுமையாக
வாழ கற்றவர்கள்


கொட்டித் தீர்க்கும்
உன் நேச மழைக்காக
கொழுந்து விட்டு
எரிந்து கொண்டிருக்கும்
தீ என்னுள்


பாதையின் முடிவு
தெரியாத பயணம்
வாழ்க்கை


சிந்தனைகள்
அழகானால்
செயல்களும்
அழகு பெறும்


Best Tamil Kavithai


உயிருக்கு உயிராக
நேசிக்கவும்
உண்மையான
உணர்வுகளுடன்
நேசிக்கவும்
ஒரு சிலரால்
மட்டுமே முடியும்


அன்பின் மொழி
தன் வலிமை
துறத்தல்


தேடாமல் நீ
கிடைத்தாய்
தெரிந்தே
தொலைக்க
விருப்பமில்லை


கடிகார முட்களின்
ஒவ்வொரு நகர்விழும்
பொத்தல்கள் விழுந்து
கொண்டே இருக்கும்
காத்திருப்பில் கட்டுண்டு
கிடக்கும் மனதிற்குள்


கொட்டித் தீர்க்கும்
உன் நேச மழைக்காக
கொழுந்து விட்டு
எரிந்து கொண்டிருக்கும்
தீ என்னுள்


ஒரு பெண்
தேவதை ஆவதும்
தேவையில்லாமல் ஆவதும்
அவள் சந்திக்கும்
ஆண் கையில்
தான் இருக்கு என்பது
நிதர்சனமான உண்மை


எப்போதும் எதார்தங்கள்
அழகானவை
எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி
வாழ்க்கையின் நொடிகளை
அழகாய் நகர்த்தி செல்லும்


பணம் பெயர் புகழ்
வந்த பின்பும்
இயல்பு மாறாத
மனித பண்புகள்
என்றும்
அழியாத சொத்துக்கள்


அன்புக்கு ஆண் பெண்
வேறுபாடு வயது வரம்பு
தேவையில்லை
உண்மையான மனமும்
வஞ்சகமில்லா நட்பும்
இயல்பான புரிதலும்
நேர்த்தியான ஒழுக்கமும்
போதும்


கடினமான
பாதைகள் தான்
அழகான
இடங்களுக்கு
அழைத்துச் செல்லும்


பிடித்தவர்களை
எதிர்பாராமல்
எதிரில் பார்ப்பது
மகிழ்ச்சியின் உச்சம்


கோபப்படும்
உரிமை இழக்கப்பட்ட
இடத்தில்
அன்பிற்கு அர்த்தம்
இல்லை


இரவு வானின்
அமைதியை
அனுபவிக்க
தெரிந்தவனுக்கு
தனிமை
என்பது வரம்


யாருமறியா முகம்
அனைவரிடமும் உண்டு
அது தெரியும்
வரை தான்
நீயும் நானும்
நல்லவர்கள்


நோகடிப்பவர் களை
நேசிக்கலாம்
நேசிப்பவர்களை
ஒரு போதும்
நோகடிக்கக் கூடாது


மறுக்கப்பட்ட அன்பும்
விடுபட்டுப் போன
வாழ்க்கையும்
மரணத்தை விடவும்
கொடுமையானது


வலிகளை சிறிதும்
வெளிக்காட்டாமல்
ஒற்றைக் கண்ணீரில்
மறைத்துவிடுபவர்கள்
இங்கு பலர்


எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி
எதார்த்தத்தை உணர்ந்து
வாழ காற்றுக்கொள்ள வேண்டும்
ஏமாற்றமாவது
இல்லாமல் இருக்கலாம்


உன்னிடத்தில்
நான் யார் என்பது
நீ நடந்து
கொள்ளும் விதத்தை
பொறுத்தே அமையும்


Tamil Kavithai Collection


நம்மை விட்டு
தொலைந்து போக
நினைக்கும் உறவுகளுக்கு
நாம் தேவை
இல்லை என்பதைவிட
அவர்களுக்கு தேவையான
ஏதோ நம்மிடம் இல்லை
என்பதே உண்மை


இறுதி வரை
விடையின்றி
புதிராய் நீளும்
இந்த வாழ்க்கையின்
இறுதி விடை
மரணம்


தலையணையே அறியும்
நமது கனவுகளையும்
கண்ணீரையும்


நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி
மரணம் வரை


இரவு முடிந்த பொழுதும்
விடிந்தும் வெளிச்சம்
கிடைக்காமல்
சிலரின் வாழ்க்கை
இருளில்


எல்லோருக்கும் நல்லவராகவே
இருக்க நினைத்தாலும்
சிலரின் பிம்பங்களுக்கு
கெட்டவர்கள் தான்


அழ இயலாத
தருணங்களில்
கவலை கோபமாகின்றது


சில மாற்றங்களை
மனது ஏற்க மறுத்தாலும்
அதுவே வலிகளோடு
கூடிய நிஜம்


நம்மிடம் பேசிட
நேரம் ஒதுக்காதவர்களிடம்
உணர்வுகளை
பகிர்ந்து கொள்ள நினைப்பது
முட்டாள் தனம்


பேசா
நொடிகள் கூட
துயரமாகி விடுகிறது
சில கண பொழுதுகளில்


இந்த உலகில்
எதுவும் நிரந்தரமில்லை
காலமும் சூழ்நிலையும்
எதையும் மாற்றும்
என்பதை அடிக்கடி
கற்றுத் தருகிறது
இந்த வாழ்க்கை


வெறுப்பதாக இருந்தால்
வெளிப்படையாகவே
சொல்லி விடுங்கள்
செயல்களின் மூலம்
சிதைக்காதீர்கள்


இறப்பை நோக்கி
தொடங்கிய
பயணத்தில் தான்
எத்தனை எத்தனை
முகமூடி முகங்கள்


எனக்கு நீ
உனக்கு நான்
காலமெல்லாம்
வாழ்வோம்
இனிதாக


மனதிற்கு பிடித்தவர்கள்
காயப்படுத்தும்போது
நமக்கு ஆதரவாக
வருவது
நம் கண்ணீர்
மட்டுமே


பொறாமையோ ஏக்கமோ
வயிற்றெரிச்சலோ
எதுவாகவேனும்
பெயரிட்டுக்கொள்ளுங்கள்
ஒருவரின் முழு அன்பையும்
பெற்றுக்கொண்டிருக்கும்
ஒருவரை கண்டால்
என்னில் உருவாகும்
இக்குணத்திற்கு


அர்த்தமற்ற வாதம்
என்றுணர்ந்த பின்
புன்னைகையுடன்
கூடிய மௌனமே
என் பதிலாய்
இருக்கக்கூடும்


Best Tamil Kavithai


முடியாமல் நீளும்
இரவுகளில்
முடிந்து போகும்
பல ஆசைகள்


தனிமை
சில நேரம்
நினைக்க வேண்டிய
விஷயங்களை
மறக்க வைக்கும்
பல நேரம்
மறக்க வேண்டிய
விஷயங்களை
நினைக்க வைக்கும்


மூழ்கினேனா
மூழ்கடிக்கபட்டேனா
இந்த கண்ணீரில்


சில வலிகளை
வார்த்தைகளால்
சுமக்க முடிவதில்லை
மனது மட்டுமே
சுமக்கிறது
எண்ணிலடங்கா
அர்த்தங்கள்
கொண்ட மொழி
மெளனம்


அலைகளில் கால்களை
நனைக்கும் போது
கிடைக்கும் சுகம்
நடு கடலில் கப்பலில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை


வாழ்வின்
ஒவ்வொரு தருணங்களும்
ஒவ்வொரு நிகழ்வுகளும்
கனவா நிஜமா
என்று அறியாமலேயே
சிதைக்கின்றோம்


நிஜங்களாலும்
நினைவுகளாலும்
நிரப்பப்பட்டதே
இந்த வாழ்வு


உன் பலத்தை
அனைவரிடமும் சொல்
உன் பலவீனத்தை
யாரிடமும்
சொல்லி விடாதே
அதையே
உன்னை வீழ்த்தும்
ஆயுதமாக பயன்படுத்துவார்கள்


மனதிற்கு பிடித்தவர்கள்
நம்மை
காயப்படுத்தும்போது
ஆதரவாக வருவது
நம் கண்ணீர் மட்டுமே


வலிக்கொண்ட
இதயத்தை தான்
மேலும் மேலும்
வார்த்தை என்னும்
வாள் வீசி
கிழிக்கிறார்கள்


உதாசினங்கள்
பழகிய பின்னர்
மனம் எதிலும்
ஆர்வம்
கொள்ளவதில்லை


காயபட்டவர்களிடம்
பேசும் அன்பான
வார்த்தைகள்
சிதைக்கப்பட்ட மரத்திற்க்கு
ஊற்றப்பட்ட நீர்


வெறுப்பூட்டும்
நினைவுகளை
மனதிலிருந்து
உதறி விட்டால்
வாழ்வின் பயணம்
இனிமையாய் மாறும்


இரவின் நிசப்தம்
என் தனிமையை ஆட்கொள்ளும்
சில நினைவலைகளால்
விழியோரம் துளிர்க்கும்
கண்ணீர் துளிகள்
என் தலையணைக்கே சொந்தம்


நீ அருகில் இல்லா
பொழுதுகள்
நீண்டு கொண்டே
போவதேனோ
என் தவிப்புகளை
அதிகமாக்கி வதைப்பதேனோ


என்னை விமர்சித்தால்
நான் கவலைபடுவதில்லை
என்னை விமர்சிக்கும்
அளவிற்கு நான் வளர்ந்து
இருக்கிறேன் அவ்வளவே


வலிகளோடு
வழியைத் தேடும்
பயணமே வாழ்க்கை


ஒரு காலத்தில்
அனைத்தையும்
நேசிக்கச் செய்ததும்
இந்த அன்புதான்
இன்று அனைத்தையும்
வெறுக்கச் செய்வதும்
அதே அன்புதான்


எண்ணங்களை
எழுத்தாக்குவதை விட
எதாரத்தங்களை
எழுத்தாக்கினால் மட்டுமே
கவனிக்கப்படுவீர்கள்


எல்லா வெறுமைகளையும்
ஏதோ ஒன்றினால்
நிரப்பி விடலாம்
இந்த மனதின்
வெறுமையை
எதை கொண்டு
நிரப்புவது


Tamil Kavithai Collection


சில நேரங்களில்
சூழ்நிலையே
ஒருவரை
தவறாக சித்தரிக்கிறது


எதற்க்கும் முற்றுப்புள்ளி
என்பது
முடிவு என்றில்லை
முற்றுப்புள்ளி கூட
தொடர்ந்தால்
தொடர்ந்து செல்லும்
என்பதே


இழப்பை சந்திக்கும்
சூழ்நிலை வரும்
போது மனம் மரித்து
தான் போகிறது
சில கன பொழுதுகளில்
இழுப்புகளில்


தான் செய்யும்
தவறை மறைக்க
அடுத்தவர்கள்
செய்யும் தவறை
பெரிதாக்குகிறார்கள்
சிலர்


அன்பான வார்த்தைகள்
எல்லாம்
பொக்கிஷமாய் இன்று
நினைவுகளில் மட்டும்


Also Read:

1000+ Love Quotes In Tamil

500+ Life Quotes In Tamil

500+ Motivational Quotes In Tamil

500+ Tamil Love Quotes

What Is Tamil Kaithai


கனவுகளாலும் நிஜங்களாலும்
நினைவுகளாலும் நிரப்பப்பட்டதே
இந்த வாழ்வு


வாழ்க்கையில்
இன்பத்தை நோக்கி
அடி எடுத்துவைக்க
நினைக்கும்
ஒவ்வொரு முறையும்
வலிகள் வழிமறித்து
கோர தாண்டவமாடி
செல்கிறது


நிராகரிப்பின் வலி
ஒருபொழுதும் நிராகரித்தவர்கள்
உணர வாய்பில்லை


வாழ்வின் அத்தனை
அபத்தங்களையும்
ஏற்றுக்கொண்டு
கடைசி வரை
போராடி வாழ்வதே
வாழ்க்கை


மிகவும் சவாலானது
நம்மைப் பற்றிய
பிறரது கற்பனைகளோடு
நாம் போராடுவது தான்
அதனால் தான் நான்
உங்கள் கற்பனைகளுக்கு
அப்பாற்பட்டவளாய்
நானாகவே இருக்கிறேன்


எதற்க்கும் முற்றுப்புள்ளி
என்பது முடிவல்ல
முற்றுப்புள்ளி
கூட தொடர்ந்தால்
தொடரும் என்பதே


இங்கே
எழுதப்படாத
வரிகளெல்லாம்
வலிகளுக்குள்
புதைந்தே போனது


இதயம்
வலித்தாலும் சிரி
அது
உடைந்தாலும் சிரி


உலகத்தில் உள்ள
சித்ரவதைகெல்லாம்
செல்ல பெயர் வைத்தால்
அதன் பெயர் தான்
அன்பு


நிரந்தரமென்று எண்ணியதெல்லாம்
தற்காலிகமாகிப் போனது


சில நேரம் மற்றவர்களையும்
பல நேரங்களில் என்னையே
சோதிக்கும் ஆயுதம்
எந்தன் அறியாமை


என் தவறுகள்
மன்னிக்க பட்டிருந்தன
அவர்களின் தேவை
என்னால்
பூர்த்தியாகும் வரை


பதிலுக்கு பதில்
கேள்வி கேட்பவருக்கு
தீர்வு காணப்பட ஆர்வமில்லை
நீங்கள் அங்கிருந்து நகர்ந்து
செல்லவே அவர்களது விருப்பம்


கிடைத்தா
இடத்தை தக்கவைத்து
கொள்வது
முதல் முயற்சியை விட
கடினமானது


Best Tamil Kavithai


பல கனவுகளோடு
வாழ நினைத்து
கடைசியில்
எல்லாம் ஒரு
கனவாகவே போனது
வாழ்வில்


இருப்பதின் மகத்துவத்தை
இருக்கும்போதே
உணர்ந்திடுங்கள்
இழந்தப்பின்
உணரப்படுவதெல்லாம்
வலிகளின் உச்சமே


அன்பு
குறைய குறைய
குறைகள் மட்டுமே
பெரிதாக தெரியும்


நாம் நேசித்த
ஒரு உறவின் இழப்பு
ஆயுள் முழுதும்
மறக்க முடியாத
வலியை தந்து
நினைவுகளில்
நிலைக்கிறது


மாறினேனா இல்லை
மாற்றப்பட்டேனா
தெரியவில்லை
ஆனால்
நான் நானாக
இல்லை என்பதே
இங்கு பலரின்
மனநிலை


ஒருவரின் மனதை
மயிலிறகாக வருடுவதும்
நெருஞ்சிமுள்ளாக
குத்தி புண்ணாக்குவதும்
நாம் உதிர்க்கும்
வார்த்தைகள் தான்


உடைந்தழ முடியா
நேரங்களில்
கண்ணீரோடு
கூடிய புன்முறுவல்
மட்டுமே பதிலாக


ஆச்சரியத்தில் தொடங்கி
அலட்சியத்தில்
முடிகிறது
சில உறவுகள்


கற்பனையில் காவியம்
வடிக்க
நீ என் கற்பனையல்ல
என் நிஜம்


இமை மூடினாலே
கனவாக வந்து
கொ(ல்)கிறாய்
விழிகளுக்குள்


வெறுக்க
ஆரம்பித்துவிட்டால்
சிறு வார்த்தைகளில்
கூட ஆயிரம்
பிழைகள் தேடுவர்


வாழ்வில் புயலாய்
நுழைந்து அன்பெனும்
கோரதாண்டவம்
ஆடி நினைவென்னும்
துயரில் ஆழ்த்தி
நம்மை சின்னாபின்னமாக்கி
சென்றவர்களே அதிகம்


நம்மை ஒருவருக்கு
பிடிக்காமல் போனால்
நாம் செய்கின்ற
சிறு சிறு செயல்கள் கூட
அவர்களுக்கு
தவறாகத்தான் தெரியும்


உணர்வு பூர்வமான
புரிதல் கொண்ட
உறவுகள் மட்டுமே
நம்முடன் இறுதி
வரை பயணிக்கும்
புரிதல் இல்லாத உறவுகள்
பாதியில் விட்டு
விலகி செல்லும்


அன்பு என்றாலே
அழகு தான்
அதை நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
தரும் போது


இமை மூடினாலே
கனவாக வந்து
கொ(ல்)கிறாய்
விழிகளுக்குள்


நாம் நேசித்த
ஒர் உறவின்
இழப்பு
ஆயுள் முழுதும்
நினைவுகளில்
நிலைத்து
மறக்க முடியாத
வலியை
வந்துவிடுகிறது


சில நேசங்களை மறுத்தும்
சில நேசங்களை மறந்தும்
‌சில நேசங்களை மறைத்தும்
மரணித்து வாழ்கிறது
பல உள்ளங்கள்


மாறினேனா இல்லை
மாற்றப்பட்டேனா
தெரியவில்லை
ஆனால்
நான் நானாக
இல்லை என்பதே
இங்கு பலரின்


Tamil Kavithai Collection


விருப்பங்களோடோ
விருப்பமின்றியோ
தொடர்கிறது
சில தனிமைகள்


எவர் மீதும்
அதீத உரிமை கொள்ளாதே
உன் எல்லை
இது தான்
என நிரூபிக்கும் போது
உடைவது மனமே
மரணமாய்


அன்பு என்பது
யாதெனில் முதலில்
யாதுமாகி நின்று
பின் யாரோவாகிப் போதல்


இப்போதெல்லாம்
ஒரு சிறிய மனமுறிவினால்
ஒரு சிறிய புரிதலின்மையால்
பிரிவுகள் நிகழ்கிறது


புரியாத அன்பு
தொடர்ந்தாலும்
முடிந்தாலும்
ஒன்று தான்


சில முற்றுப்புள்ளிகள்
முழு மனதுடன்
வைக்கப்படுவதில்லை
சில காலத்தின் கட்டாயம்
சில காயத்தின் கட்டாயம்


வாழ்வில் புயலாய்
நுழைந்து அன்பெனும்
கோரதாண்டவம்
ஆடி நினைவென்னும்
துயரில் ஆழ்த்தி
நம்மை சின்னாபின்னமாக்கி
சென்றவர்களே அதிகம்


வாழ்க்கை
என்றும் எளிதல்ல
எல்லாவற்றையும்
தாங்கும் இதயத்திற்கு
வலிகள் புதிதல்ல


மனக்கடலில்
நின் நினைவலைகள்
ஓயாது ஓலமிட்டு
கொல்கிறது


கேள்விகள் சத்தமாக
கேட்கும் இடத்தில்
பதில்கள் திமிராக
சொல்வதில் தவறு
ஏதும் இல்லையே


புரியாத அன்பு
தொடர்ந்தாலும்
முடிந்தாலும்
ஒன்று தான்


பிரிவெனும் நரகத்தில்
உழன்று கொண்டிருக்கும் அவள் மனதில்
தாங்கிட முடியா
வலியின் உணர்வுகள்


தனிமையில்
இருக்கும்
அவள் விழிகளில்
பெருமழையின்
அடர்த்தி


அலட்சியம் காட்டும்
இடத்தில்
நம் அருமையை
சொல்லி புரிய
வைப்பதை விட
அவர்களை விட்டு
விலகி செல்வதே மேல்
எங்கு அலட்சியம்
இருக்கிறதோ
அங்கு நமக்கான
மதிப்பு இருக்காது


சில வரிகளில்
கூறப்படும் வலிகளின்
ஆழம் எல்லோராலும்
புரிந்துகொள்ள முடிவதில்லை
அனுபவப்பட்டவர்களை தவிர


தொட முடியா
தொலைவானமாய்
தொலைவினில்
நீ தொட்டு விட
வேண்டுமென்றே
பேராசையில்
என் மனது


அணைத்து கொள்ளும்
அன்பே
மாபெரும் ஆறுதல்


Tamil Kavithai Collection | Best Tamil Kavithai


முடிவில், “Tamil Kavithai” என்பது இந்திய இலக்கியத்தின் ஒரு பெரிய மற்றும் முக்கியமான பகுதியாகும், இது மொழி, சிந்தனை மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாகத் தொடுகிறது. இது தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய பகுதியாகும். அதன் கவிதைகள் மொழி, உணர்வுகள் மற்றும் எண்ணங்களை தனித்துவமாகவும் அழகாகவும் வெளிப்படுத்துகின்றன, இதன் மூலம் நமது இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை இன்னும் விலைமதிப்பற்றதாக ஆக்குகின்றன.

Also Read:

1000+ Love Quotes In Tamil

500+ Life Quotes In Tamil

500+ Motivational Quotes In Tamil

500+ Tamil Love Quotes

What Is Tamil Kaithai

Tamil Kavithai Collection

100+ Sad Quotes In Tamil

எங்களின் இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *